/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
குடும்ப தகராறில் மனைவி தீக்குளிப்பு; கணவர் கைது
/
குடும்ப தகராறில் மனைவி தீக்குளிப்பு; கணவர் கைது
ADDED : ஜூலை 13, 2025 01:33 AM
ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி அருகே, குடும்ப தகராறில் டீசல் ஊற்றி மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால், கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா தெருவை சேர்ந்தவர் ரமேஷ். 43. இவர் மனைவி மல்லிகா, 40. பொம்மை வியாபாரம் செய்து வரும் இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர்.
தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மல்லிகா தன் உடல் மீது டீசலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், மல்லிகாவை மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் மல்லிகா சேர்க்கப்பட்டார். நாட்றம்பள்ளி போலீசார், ரமேஷை கைது செய்தனர்.