/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
விபத்தில் சிக்கிய கார் மாணவர், பெண் பலி
/
விபத்தில் சிக்கிய கார் மாணவர், பெண் பலி
ADDED : பிப் 14, 2025 01:25 AM
திருப்பத்துார்,:அதிவேகமாக ஓட்டி வந்த கார் சாலையோர வீட்டினுள் புகுந்ததில், மாணவர் உட்பட இருவர் பலியாகினர்.
கோவையைச் சேர்ந்தவர் மோகன்தாஸ், 28; ஆந்திர மாநிலத்தில் தனியார் சட்டக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் நேற்று மாலை 5:00 மணியளவில், சென்னை - பெங்களூரு சாலையில் 'ஹூண்டாய்' காரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கவிதா, 40, தன் பசு மாட்டுடன் சாலையை கடக்க முயன்றார். மோகன்தாஸ் கார், கவிதா மீது மோதி, அருகிலுள்ள வீட்டினுள் புகுந்தது.
இதில், கவிதாவும், காரை ஓட்டி வந்த மோகன்தாசும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நாட்றம் பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

