/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கிணற்றில் சடலமாக மாணவன் மீட்பு; பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மறியல்
/
கிணற்றில் சடலமாக மாணவன் மீட்பு; பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மறியல்
கிணற்றில் சடலமாக மாணவன் மீட்பு; பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மறியல்
கிணற்றில் சடலமாக மாணவன் மீட்பு; பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மறியல்
ADDED : ஆக 04, 2025 12:45 AM
திருப்பத்துார்; விடுதியில் தங்கி படித்த பள்ளி மாணவன், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, உறவினர்கள், அரசியல் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்துாரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் முகிலன், 16; திருப்பத்துார் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் -1 படித்தார். நேற்று முன்தினம் காலை விடுதியில் மாயமானார்.
பெற்றோர் புகார்படி, திருப்பத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர். பள்ளி வளாகத்தில் இ ருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பள்ளி பின்புறம் இருந்த கிணற்று பக்கம் மாணவர் சென்ற காட்சி இருந்தது.
போலீசார் பள்ளி வளாகத்தில் நேற்று காலை தேடியபோது, இரும்பு கம்பியால் மூடப்பட்ட கிணற்றில் மாணவன் சடலம் கிடந்தது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். மர்ம மரணம் என, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், 'பள்ளியை மூட வேண்டும். பாதிரியாரை கைது செய்ய வேண்டும். மாணவன் சாவுக்கு நியாயம் வேண்டும்' என்று கூறி, திருப்பத்துார் - கிருஷ்ணகிரி சாலையில், திருப்பத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன், அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - ஹிந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பர்ஷித் உள்ளிட்ட அமைப்பினர், நேற்று மறியலில் ஈடு பட்டனர். இதில், மாணவரின் பெற்றோர், உறவினர்கள் பங்கேற்றனர். திருப்பத்துார் எஸ்.பி., மயில்வாகனம் பேச்சு நடத்தினார். பின், மறியல் முடிவுக்கு வந்தது .
அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிகழும், மாணவ - மாணவியரின் தொடர் மரணம் குறித்து, உயர்நிலை விசாரணை நடத்த, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.