/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ரயிலில் பாய்ந்த பெண் கால்கள் துண்டிப்பு
/
ரயிலில் பாய்ந்த பெண் கால்கள் துண்டிப்பு
ADDED : ஆக 06, 2025 12:37 AM
ஜோலார்பேட்டை:காதல் தோல்வியால் ரயிலில் பாய்ந்து, தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் கால்கள் துண்டாகின.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; திருமணமானவர். இவரை, ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரை சேர்ந்த அஸ்வினி, 20, என்ற பெண், ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். இரு மாதங்களுக்கு முன்பு அஸ்வினி, சதீஷ்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.
அதற்கு சதீஷ்குமார், தான் திருமணமானவர் எனக்கூறி மறுத்தார். மனமுடைந்த அஸ்வினி, தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று, ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில், ரேணிகுண்டாவிலிருந்து வந்த சரக்கு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது, அவரது இரு கால்களும் துண்டாயின. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.