UPDATED : நவ 10, 2026 10:50 PM
ADDED : நவ 10, 2026 10:20 PM
திருப்பத்துார்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சரவணன், 38, என்பவரை, பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில், அரசு இந்தி நிதி உதவி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
ஆசிரியர் சரவணன், இரண்டாம் வகுப்பு படிக்கும், 7 வயது மாணவியிடம், நவ., 5ல் பள்ளியின் கழிப்பறைக்கு அழைத்து சென்று, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
தீபாவளி பள்ளி முடிந்து, நேற்று பள்ளி திறந்த நிலையில் சரவணன் பணிக்கு வந்ததும். மாணவியின் பெற்றோர் மற்றும் உற வினர்கள், பள்ளிக்கு சென்று, அவரை சரமாரி தாக்கினர். ஆம்பூர் போலீசார், சரவணனை மீட்டு, போக்சோவில் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
