/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கில் வாலிபர் குற்றவாளி: நீதிபதி தீர்ப்பு
/
ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கில் வாலிபர் குற்றவாளி: நீதிபதி தீர்ப்பு
ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கில் வாலிபர் குற்றவாளி: நீதிபதி தீர்ப்பு
ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கில் வாலிபர் குற்றவாளி: நீதிபதி தீர்ப்பு
ADDED : ஜூலை 12, 2025 02:05 AM
திருப்பத்துார்:ஓடும் ரயிலில், கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் குற்றவாளி எனவும், தண்டனை விபரம் ஜூலை 14ம் தேதி அறிவிக்கப்படும் என, நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருப்பூரை சேர்ந்தவர் டைலரிங் தொழிலாளி ரேவதி, 34. இவர், 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிப்., 6ம் தேதி ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு, திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், பெண்கள் பொது பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் சென்றவுடன், ரேவதி மட்டும் அந்த பெட்டியில் தனியாக இருந்தார். அப்போது, வேலுார் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்த ேஹமராஜ், 28, என்பவர் பெட்டியில் ஏறினார்.
அதற்கு ரேவதி, 'இது பெண்கள் பெட்டி' என்று கூறியதற்கு, ேஹமராஜ் அவசரமாக ஏறி விட்டதாகவும், அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இறங்கி விடுவதாக கூறியவர், திடீரென ரேவதியை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றார்.
ரேவதி எதிர்ப்பு தெரிவித்ததால், குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன்-கே.வி.குப்பம் ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ேஹமராஜ், ரேவதியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். ரயில் காட்பாடி சென்றவுடன் ேஹமராஜ் இறங்கி தப்பினார். ரயிலில் இருந்து விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் மீட்டனர். போலீசார் ேஹமராஜை கைது செய்தனர்.
நேற்று வழக்கை மாவட்ட நீதிபதி மீனாகுமாரி விசாரித்து, ேஹமராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்தார். தண்டனை விபரம் ஜூலை 14ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
ேஹமராஜ் 2022ல் சென்னையில் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் அலைபேசி, செயின் பறித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட வழக்கு, 2023ல் சென்னை பெண்ணை காட்பாடிக்கு அழைத்து வந்து கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளன.