/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
வயிற்று வலியால் துடித்த பெண்ணை கிண்டல் செய்து அலைக்கழித்த டாக்டர்
/
வயிற்று வலியால் துடித்த பெண்ணை கிண்டல் செய்து அலைக்கழித்த டாக்டர்
வயிற்று வலியால் துடித்த பெண்ணை கிண்டல் செய்து அலைக்கழித்த டாக்டர்
வயிற்று வலியால் துடித்த பெண்ணை கிண்டல் செய்து அலைக்கழித்த டாக்டர்
ADDED : ஜன 14, 2024 01:05 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரைசேர்ந்தவர் சபீர் அகமது 40. இவரது மனைவி மொகரம் 37. இவருக்கு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வயிற்று வலி ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
அங்கு ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும் சிகிச்சை அளிக்காததால் உறவினர்கள் அங்குஇருந்த டாக்டர் கார்த்திகேயன் 39 என்பவரிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் 'நான் எலும்பு முறிவு டாக்டர்; எனக்கு இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்க தெரியாது' என கூறிவிட்டு அங்கிருந்த மருத்துவமனை ஊழியரிடம் 'ஏதாவது ஒரு ஊசியை குத்தி இங்கிருந்து அவரை அனுப்பி வையுங்கள் அல்லது வேலுார் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கிறேன்.
'காய்கறி வாங்க செல்லும்போது ஒரு கடையில்இல்லாத காயை வேறு கடையில் வாங்குவதில்லையா; அதுபோல வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்' என கிண்டலாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டாக்டரின் இந்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

