/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஏலகிரியில் கரடி தாக்கி வியாபாரி படுகாயம்
/
ஏலகிரியில் கரடி தாக்கி வியாபாரி படுகாயம்
ADDED : ஜூலை 26, 2025 10:41 PM
ஜோலார்பேட்டை:ஏலகிரி மலையில், கரடி தாக்கியதில் பைக்கில் சென்ற தேங்காய் வியாபாரி படுகாயமடைந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் வார வெள்ளிக்கிழமையில் சந்தை நடக்கிறது. ஜோலார்பேட்டை அருகே வணக்கம்பட்டி மண்டலவாடியை சேர்ந்த தேங்காய் வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, 57, நேற்று முன்தினம், சந்தையில் பொருட்களை வாங்க, தன் ஹோண்டா பைக்கில் சென்றார்.
பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு 8:30 மணியளவில் வீடு திரும்பினார். மலைப்பாதை, 12-வது கொண்டை ஊசி வளைவில், சாலையோரம் நின்றிருந்த கரடியை பார்த்து பயந்த கிருஷ்ணமூர்த்தி, பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
அ ப்போது, கரடி அவர் மீதேறி கடித்து, தாக்கியது. கிருஷ்ணமூர்த்தி அலறி கூச்சலிட்டதால், கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது. அந்த வழியாக வந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏலகிரி மலை போலீசார் விசா ரிக்கின்றனர்.