ADDED : ஏப் 05, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
ஆம்பூர்: சமூக வலைதளத்தில், த.வெ.க.,விற்கு ஆதரவாக பதிவிட்ட, ஆம்பூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மணிமாறன், தன் சமூக வலைதள பக்கத்தில், த.வெ.க.,வுக்கு ஆதரவாகவும், மற்ற கட்சிகளை இழிவுபடுத்தியும் கருத்து பதிவிட்டதாக தெரிகிறது.
மாவட்ட எஸ்.பி., சியாமளாதேவி விசாரணை நடத்தி, மணிமாறனை, சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டார்.
