/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
2 குட்டிகளுடன் கிராமத்தில் புகுந்த கரடி கடித்து இளம்பெண் படுகாயம்
/
2 குட்டிகளுடன் கிராமத்தில் புகுந்த கரடி கடித்து இளம்பெண் படுகாயம்
2 குட்டிகளுடன் கிராமத்தில் புகுந்த கரடி கடித்து இளம்பெண் படுகாயம்
2 குட்டிகளுடன் கிராமத்தில் புகுந்த கரடி கடித்து இளம்பெண் படுகாயம்
ADDED : மே 02, 2025 02:31 AM

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, இரண்டு குட்டிகளுடன் கிராமத்திற்குள் புகுந்த கரடி கடித்ததில், பருத்திக் காட்டில் பணியில் இருந்த பெண் படுகாயமடைந்தார். பொதுமக்கள் கூச்சலிட்டதால், குட்டிகள் வனத்திற்குள் தப்பி ஓட, அங்கு வீட்டிற்குள் புகுந்த தாய்க் கரடியை வனத்துறையினர் பிடித்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம், செத்தமலை வனப்பகுதியில் இருந்து ஒரு தாய்க் கரடி மற்றும் இரு குட்டிகள், நேற்று அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் புகுந்தன. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மணிமேகலை, 27, என்பவர் கரடியை பார்த்து கூச்சலிட்டார்.
அவரை கரடி துரத்திச் சென்று கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்தபோது, இரு குட்டிக்கரடிகள் வனத்திற்குள் தப்பி ஓடின. தாய்க்கரடி பேட்டராயன் பகுதியிலுள்ள ராமி என்பவரின் வீட்டிற்குள் புகுந்தது.
நாட்றம்பள்ளி வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, கரடியை வலைவீசி பிடித்து, கூண்டுக்குள் அடைத்து, அடர்ந்த வனத்தில் விட நடவடிக்கை எடுத்தனர். படுகாயமடைந்த மணிமேகலை, புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.