sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொப்பரை மற்றும் தேங்காய் விலை திடீர் சரிவு :விவசாயிகளை காப்பாற்ற கோரிக்கை

/

கொப்பரை மற்றும் தேங்காய் விலை திடீர் சரிவு :விவசாயிகளை காப்பாற்ற கோரிக்கை

கொப்பரை மற்றும் தேங்காய் விலை திடீர் சரிவு :விவசாயிகளை காப்பாற்ற கோரிக்கை

கொப்பரை மற்றும் தேங்காய் விலை திடீர் சரிவு :விவசாயிகளை காப்பாற்ற கோரிக்கை


ADDED : ஜூலை 13, 2011 09:58 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : கொப்பரை விலை சரிவால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அமைப்பின் மாநில தலைவர் வேலாயுதம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:கொப்பரையின் விற்பனை விலை கிலோ 67 ரூபாயிலிருந்து 45 ரூபாயாக குறைந்துள்ளது.

விலை சரிவுக்கு பாமாயில் இறக்குமதி முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது. எனவே பாமாயில் இறக்குமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும். சில மாதங்கள் நிலையாக இருந்த கொப்பரை விலை திடீரென சரிந்துள்ளதால், பல ஆயிரம் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தென்னை விவசாயிகளை பாதுகாக்க அரசு மானியம் வழங்க வேண்டும். கொப்பரை ஆதார விலை கிலோவுக்கு 65 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். ஆதார விலைக்கு கீழே சந்தை விலை வரும் போது ஏற்படும் வித்தியாச தொகையை மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தென்னை சாகுபடியில் ஒரு மரத்தில் ஆண்டிற்கு சராசரி மகசூல் 120 தேங்காய்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டு 100 தேங்காய்களுக்கு 14 கிலோ கொப்பரை உற்பத்தி அளவில் அனைத்து விவசாயிகளுக்கும் சராசரி கொப்பரை சந்தை விலை அடிப்படையில் வித்தியாச தொகை மானியமாக வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுமலை தாலுகா தென்னை விவசாயிகள் சார்பில், ஊரக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலுவிடம் அளிக்கப்பட்ட மனுவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தேங்காய் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை தோட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரத்தில் தேங்காய் விலை 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை சரிந்துள்ளது. அனைத்து இடுபொருட்களின் விலையும், தினக்கூலியும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை சரிவு விவசாயிகளை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள் ளது. எனவே தமிழக அரசு தேங்காய் விலை சரிவை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us