sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தமிழக பட்ஜெட் இன்று ஆலோசனை திருப்பூர் தொழில் துறையினர் விரைவு

/

தமிழக பட்ஜெட் இன்று ஆலோசனை திருப்பூர் தொழில் துறையினர் விரைவு

தமிழக பட்ஜெட் இன்று ஆலோசனை திருப்பூர் தொழில் துறையினர் விரைவு

தமிழக பட்ஜெட் இன்று ஆலோசனை திருப்பூர் தொழில் துறையினர் விரைவு


ADDED : ஜூலை 14, 2011 02:07 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டம், சென்னையில் இன்று (14ம் தேதி) நடக்கிறது.

அதற்காக, ஒவ்வொரு தொழில் அமைப்புகளும் தொழில் பாதுகாப்பு கோரிக்கைகளுடன் சென்னையில் முகாமிட்டுள்ளனர். தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக., 4ம் தேதி துவங்குகிறது. அதற்கான தயாரிப்பு பணிகள் வேகமாக நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டம், சென்னையில் இன்று மாலை நடக்கிறது. அதற்காக, முக்கிய தொழில் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இதுபோன்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று, திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் தங்களது கருத்துக்களை, தொழில் பாதுகாப்பு கோரிக்கைகளையும் முன்வைப்பர்.

அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் மீதான, ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. அதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை தயாரித்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, நேற்றே சென்னை சென்று விட்டனர். குறிப்பாக, உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தியாளர்கள் சார்பில், மத்திய கலால் வரியை நீக்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும், 'வாட்' வரி, சாயத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us