sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லடம் ரெயின்போ ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

/

பல்லடம் ரெயின்போ ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் ரெயின்போ ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் ரெயின்போ ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு


ADDED : ஜூலை 14, 2011 09:40 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : பல்லடம் ரெயின்போ ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, எம்.சி., திருமண மண்டபத்தில் நடந்தது.மாவட்ட வருங்கால ரோட்டரி கவர்னர் செந்தில்நாதன் சிவா தலைமை வகித்தார். புதிய தலைவராக நடராஜன், செயலாளராக சாகுல் அமீது, பொருளாளராக லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர். காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம், பள்ளி சுற்றுப்புறம், பள்ளி வளாகம் பராமரிப்பு மற்றும் கோவில் பராமரிப்புக்கு ரூ.30 ஆயிரம், சாமிகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஞானசவுந்தரிக்கு ரூ.3000 கல்வி உதவித்தொகை, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ராயர்பாளையம் அபிநயாவுக்கு ரூ.2000, அபிராமி நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நிரஞ்சனிக்கு ஓராண்டு பள்ளி வேன் கட்டணம் ரூ.2,000 வழங்கப்பட்டது.சடையன்செட்டிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை, ராயர்பாளையம் அங்கன்வாடிக்கு ஸ்டீல் பீரோ என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சந்திரலேகா, துணை கவர்னர் நடராஜன், ஜி.ஜி.ஆர்., கனகராஜ், மாவட்ட செயலாளர் மனோகரன், துணை செயலாளர் அண்ணாமலை, பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் நசிருதீன் மற்றும் ரெயின்போ ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயலாளர் சாகுல் அமீது நன்றி

கூறினார்.






      Dinamalar
      Follow us