/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,க்கு கட்டாய ஓய்வு
/
திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,க்கு கட்டாய ஓய்வு
திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,க்கு கட்டாய ஓய்வு
திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,க்கு கட்டாய ஓய்வு
ADDED : டிச 01, 2025 12:55 AM
திருப்பூர்: சேலத்தில் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சந்திரசேகரன், நவ., 26ம் தேதி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் செயல்படும், குற்ற ஆவண காப்பகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு முன், மாவட்ட குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு என, பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார்.
இவர், தர்மபுரியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது, லஞ்ச புகாரில் சிக்கினார். இது தொடர்பாக, அவரிடம் பல கட்டமாக விசாரணை நடந்தது. புகார் தொடர்பாக, அவருக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் தீரஜ்குமார், திருப்பூர் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த உத்தரவு நகல், சந்திரசேகனுக்கு, திருப்பூர் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து நேற்று வழங்கப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'டிஸ்மிஸ் செய்வதற்கு பதிலாக, தண்டனையை குறைத்து வழங்குவதற்காக, கட்டாய பணி ஓய்வு வழங்குவது, காவல் துறையில் உள்ள நிர்வாக நடைமுறைகளில் ஒன்று' என்றனர்.

