/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பணியாளர் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி
/
அரசு பணியாளர் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : ஜூலை 17, 2011 01:19 AM
திருப்பூர் : அரசு பணியாளர் எழுத்து தேர்வில் பங்கேற்க உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கலெக்டர் மதிவாணன் அறிக்கை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி இரண்டில் அடங்கியுள்ள 6,695 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 30ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது; வரும் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை 10 நாட்களுக்கு, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் தேர்வு அறை நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) நகலுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு 19ம் தேதி காலை 10.00 மணிக்கு நேரில் அணுகி, இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.