/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல கூடைப்பந்து போட்டி ஜார்க்கண்ட் அணிக்கு கோப்பை
/
மண்டல கூடைப்பந்து போட்டி ஜார்க்கண்ட் அணிக்கு கோப்பை
மண்டல கூடைப்பந்து போட்டி ஜார்க்கண்ட் அணிக்கு கோப்பை
மண்டல கூடைப்பந்து போட்டி ஜார்க்கண்ட் அணிக்கு கோப்பை
ADDED : செப் 25, 2011 01:11 AM
உடுமலை :சைனிக் பள்ளி மண்டலங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், ஜார்க்கண்ட் மாநிலம் தில்லையா சைனிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.
உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, சைனிக் பள்ளி மண்டலங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, பள்ளியில் நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் தில்லையா சைனிக் பள்ளி (மத்திய மண்டலம்), சித்தோர்கர் (மேற்கு மண்டலம்),கோரக்கால் (வடக்கு மண்டலம்),புங்கல்வா (நாகலாந்து), அமராவதி நகர் (தமிழ்நாடு) ஆகிய அணிகள் பங்கேற்றன.நாகலாந்து சைனிக் பள்ளி முதல்வர் அழகுராஜா, போட்டியை துவக்கி வைத்தார். புள்ளிகள் அடிப்படையில், தில்லையா சைனிக் பள்ளி முதலிடம், அமராவதி நகர் சைனிக் பள்ளி 2வது இடம், சித்தோர்கர் அணி 3ம் இடம், புங்கல்வா 4ம் இடம், கோராக்கால் 5ம் இடம் பிடித்தன. கோவை ஐ.என்.எஸ்., அக்ரான் கமாண்டிங் ஆபீசர் கமோடர் அமர்சிங் பஹேல், வெற்றி பெற்ற பள்ளிக்கு கோப்பை, மாணவர்களுக்கு சான்றிதழ் பரிசு வழங்கி பேசுகையில், ''பள்ளி மாணவர்கள், தங்களின் ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ள இதுபோன்ற போட்டிகள் உதவும். இப்பள்ளியில் சேர்வதற்குரிய நோக்கம், ராணுவத்தின் முப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து, நாட்டுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும்; இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் உருவாக்கி தரப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும்,'' என்றார். சிறந்த வீரராக அமர்தீப்குமார் (தில்லையா சைனிக் பள்ளி) தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டி ஏற்பாடுகளை, அமராவதி நகர் சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் சந்தீப்சக்கரவர்த்தி, தலைமையாசிரியர் விங்க் கமாண்டர் ரவிக்குமார், பதிவாளர் ஸ்குவார்டன் லீடர் கான், மூத்த ஆசிரியர் சார்லஸ் யுஜின் மேற்கொண்டனர்.