sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை சரிவு

/

நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை சரிவு

நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை சரிவு

நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை சரிவு


ADDED : ஜூலை 14, 2011 09:47 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : அரசு மீன் வளர்ச்சி கழக நெய்தல் அங்காடியில், கடந்த மாதத்தைவிட மீன் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது.

ஆழியாறு, அமராவதி, திருமூர்த்தி, பாலாறு அணை பகுதிகளில் இருந்து திருப்பூரில் உள்ள அரசு மீன் வளர்ச்சி கழக நெய்தல் அங்காடிக்கு விற்பனைக்கு மீன் கொண்டு வரப்படுகிறது. கட்லா, ரோகு, மிர்கால், வாளை, கெளுத்தி, பெரிய சிலேபியா, சிறிய சிலேபியா, இறால், வஞ்சிரம், அயிலை உள்ளிட்ட பலதரப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாதம் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு முதல் மூன்று டன் வரை மீன் வர்த்தகம் நடந்தது. ஆடி மாதம் பிறக்க உள்ளதையடுத்து பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால், மீன் வளர்ச்சி கழகத்தில் விற்பனை குறைந்துள்ளது.மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் மீன் சீசன் முடிந்துள்ளது. கேரள மீன் வரத்தை எதிர்நோக்கி உள்ளோம். மீன் வரத்து குறைந்ததால், ரகத்துக்கு ரூ.50 முதல் 100 வரை விலை ஏற்றம் அடைந்துள்ளது. ஆடி முதல் மார்கழி வரை ஆறு மாதமும் சுபதினங்கள் நிறைந்தவை. பெரும்பாலானோர் ஒரு மாதமாக இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை தவிர்த்து விட்டனர். இதனால், மீன் அங்காடியில் கடந்த மாதம் வரை மூன்று டன்னாக இருந்த மீன் விற்பனை, தற்போது ஒரு டன்னாக குறைந்துள்ளது. மார்கழி மாதம் வரை விற்பனை மந்தமாகவே இருக்கும், என்றனர்.






      Dinamalar
      Follow us