sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கம்பன் கழக பேச்சு போட்டி 16க்குள் விண்ணப்பிக்கணும்

/

கம்பன் கழக பேச்சு போட்டி 16க்குள் விண்ணப்பிக்கணும்

கம்பன் கழக பேச்சு போட்டி 16க்குள் விண்ணப்பிக்கணும்

கம்பன் கழக பேச்சு போட்டி 16க்குள் விண்ணப்பிக்கணும்


ADDED : ஜூலை 14, 2011 09:39 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் வரும் 23ம் தேதி பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், அனைத்து பள்ளி ஆசிரியர், கல்லூரி மாணவ, மாணவியருக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. திருப்பூர் டவுன்ஹாலில் உள்ள லயன்ஸ் கிளப் கட்டடத்தில் வரும் 23ம் தேதி போட்டி நடைபெறும்.

பள்ளி மாணவர்கள், கம்பன் கண்ட மாணவ ராமன், குகனின் அன்புள்ளம் ஆகிய தலைப்புகளில் ஐந்து நிமிடம் பேச வேண்டும். வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசு ரூ.1,500, இரண்டாம் பரிசு ரூ.1,000, மூன்றாம் பரிசு 500 ரூபாய் மற்றும் ரூ.250 வீதம் மூன்று ஆறுதல் பரிசு வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு கம்பன் கவி இன்பம், சுக்ரீவன் நட்பு ஆகிய தலைப்புகளில் ஆறு நிமிடம் பேச வேண்டும். முதல் பரிசு ரூ.2,000, இரண்டாம் பரிசு ரூ.1,500, மூன்றாம் பரிசு ரூ.1,000 மற்றும் ரூ.500 வீதம் மூன்று ஆறுதல் பரிசு வழங்கப்படும். அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான பேச்சு போட்டியில், அனுமனின் தொண்டு நெறி, இராவணன் - மாட்சியும், வீழ்ச்சியும் என்ற தலைப்பில் ஏழு நிமிடங்கள் பேச வேண்டும். முதல் பரிசு ரூ.2,500, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,500 மற்றும் ரூ.750 வீதம் மூன்று ஆறுதல் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியில் இருந்து மூன்று பேரும், ஆசிரியர்கள் இரண்டு பேரும், கல்லூரியில் இருந்து இரண்டு பேர் விண்ணப்பிக்கலாம். வரும் 16க்குள், திருப்பூர் கம்பன் கழகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும், என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us