/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வினர் 60 பேருக்கு ஆசை
/
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வினர் 60 பேருக்கு ஆசை
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வினர் 60 பேருக்கு ஆசை
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வினர் 60 பேருக்கு ஆசை
ADDED : செப் 05, 2011 11:23 PM
திருப்பூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க.,வில் 60 பேர் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியம் என உள்ளாட்சி சார்ந்த பதவிகளுக்கு, போட்டியிட விரும்புவோர், மனு தாக்கல் செய்ய, மாவட்ட தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது. விருப்ப மனு தாக்கல் நேற்று துவங்கியது; 12ம் தேதி மாலை 5.00 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில் 1,100 விண்ணப்பங்களை தி.மு.க.,வினர் நேற்று வாங்கிச் சென்றனர். 60 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர்; பேரூர் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜனிடம், பூர்த்தி செய்த மனுக்களை தி.மு.க.,வினர் அளித்தனர். மாவட்ட தி.மு.க., செயலாளர் சாமிநாதன், மேயர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.