/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
/
செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : ஜூலை 11, 2011 09:34 PM
திருப்பூர் : மாநில அளவிலான 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு செஸ்
போட்டிக்கு, திருப்பூர் மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி, கே.ஜி.எஸ்.,
மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
பல்வேறு பள்ளி களை சேர்ந்த 150 மாணவ, மாணவியர்
விளையாடினர். மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது. ஏழு வயதுக்கு
உட்பட்டோர் மாணவர் பிரிவில் ஜோகிநாத், அருணாசலம் மற்றும் மாணவியர் பிரிவில்
சுவேதவர்ஷினி, யாழினி ஆகியோர் வெற்றி பெற் றனர். 10 வயதுக்கு உட்பட்டோர்
மாணவர் பிரிவில், தனுர் பிரணவ், அஷ்வத்குமார், மாணவியர் பிரிவில் விவேகிதா,
அபிநயா, 19 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் கோபிகிருஷ்ணா,
விக்னேஸ்வரன், மாணவியர் பிரிவில் மங்கலகவுரி, மதுமிதா ஆகியோர் வெற்றி
பெற்றனர். 13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் சுப்பையா பள்ளியை
சேர்ந்த நிஷாந்த் மற்றும் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியை சேர்ந்த வைஷ்ணவ் வெற்றி
பெற்றனர். மாணவியர் பிரிவில் சுப்பையா பள்ளியை சேர்ந்த காயத்ரி மற்றும்
பாரதி கிட்ஸ் பள்ளியை சேர்ந்த தக்ஷனா ஆகியோர் வெற்றி பெற் றனர்.
இப்பிரிவில் வெற்றி பெற்ற மாணவ, மாண வியர், வரும் ஆக., 6 முதல் 13 வரை,
சேலத்தில் நடக் கும் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
டி.எஸ்.பி., ராஜாராம், திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர்
சிவசண்முகம், செயலாளர் நேரு ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி
பாராட்டினர். பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்
வழங்கப்பட்டது.