/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேக முரசு ரதம்திருப்பூர் வருகை
/
விவேக முரசு ரதம்திருப்பூர் வருகை
ADDED : ஜூலை 11, 2011 09:36 PM
திருப்பூர் : விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை தெரி விக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விவேக முரசு ரதம், திருப்பூர் வித்யா மந்திர் பள்ளிக்கு வந்திருந்தது.
ஸ்ரீவிவேகானந்தா சேவாலய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன் அறிக்கை: விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா கொண்டாட, ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதி யாக, மாணவ, மாணவியர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 'விவேக முரசு ரதம்' பல்வேறு இடங்களுக்கு வலம் வருகிறது.திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள வித்யா மந்திர் பள்ளிக்கு இத்தேர் வந்திருந் தது. மாணவ, மாணவியருக்கு சொற்பொழிவு, விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, ஆளுமை திறன் விளக்கப்பட்டது.விவேகானந்தரின் புத்தகங்கள் கண்காட்சியாக வைக் கப்பட்டு இருந்தன. சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சங்கராத்மானந்தர் ஆசியுரை வழங்கினார். வரும் 15ம் தேதி வரை, திருப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு இத்தேர் செல்ல உள்ளது, என, தெரிவித்துள்ளார்.