sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாயமான டிவைடர்கள்; மாணவர்களுக்கு ஆபத்து

/

மாயமான டிவைடர்கள்; மாணவர்களுக்கு ஆபத்து

மாயமான டிவைடர்கள்; மாணவர்களுக்கு ஆபத்து

மாயமான டிவைடர்கள்; மாணவர்களுக்கு ஆபத்து


ADDED : ஜூலை 13, 2011 01:57 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வைக்கப்பட்டிருந்த டிவைடர் மாயமாகியுள்ளதால் மாணவர்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் எதிரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் உள்ளது. மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்ததால், மாணவர்கள் ரோட்டை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் விபத்திற்குள்ளானதால் பெற்றோர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளியின் அருகில் வேகத்தடை அமைக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், பள்ளியிலிருந்து சற்று தள்ளி வேகத்தடை அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு பலனில்லாத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து, குடிமங்கலம் போலீசார் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டிவைடர் வைக்கப்பட்டது. இதனால், வாகனங்களின் வேகம் குறைந்தது. மாணவர்களும் எளிதாக விபத்தில்லாமல் ரோட்டை கடந்து வந்தனர்.கடந்த கோடை விடுமுறையின் போது பள்ளியின் அருகில் இருந்த டிவைடரை குடிமங்கலம் போலீசார் வேறு பணிகளுக்காக எடுத்து சென்றனர். இதுவரை டிவைடர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வைக்கப்படவில்லை.

டிவைடர் மாயமான நிலையில், கடந்த வாரம் ரோட்டை கடக்க முயன்ற ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி அப்பகுதியில் வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் நலனுக்காக உடனடியாக அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குடிமங்கலம் போலீசார் எடுத்து சென்ற டிவைடர்களை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us