/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்.எச்., ரோட்டை சீரமைக்க கோரிக்கை
/
என்.எச்., ரோட்டை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
அவிநாசி : அவிநாசியில் என்.எச்., ரோட்டை சீரமைக்க, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
அவிநாசி ஒன்றிய பா.ஜ., ஆலோசனை கூட்டம், ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பு துணை தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெயகோபால் வரவேற்றார். ஒன்றிய பொது செயலாளர் ஆறுமுகம், அமைப்பு செயலாளர் சரவணன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில், 'அவிநாசி வழியே செல்லும் என்.எச்., 47 ரோட்டோரம் க.ச.எண்: 85 பி-2 ல் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தி வரும் என்.எச்., ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும், செம்பியநல்லூர் ஊராட்சி, கரையப்பாளையத்தில் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.