ADDED : ஜூலை 17, 2011 01:16 AM
உடுமலை : குடிமங்கலம் வட்டார கிராமங்களில், வேளாண் துறை சார்பில் சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
பெதப்பம்பட்டி வேளாண் விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் அறிக்கை:
நடப்பு நிதியாண்டில் சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. திட்டத்துக்காக, குடிமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூலை18ம் தேதி, இலுப்பநகரம், குமாரபாளையம், ஆமந்தகடவு, வீதம்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, கொங்கல்நகரம்புதூர், லிங்கமாவூர் கிராமங்களில் பணி நடக்கிறது. 19ம் தேதி மூங்கில்தொழுவு, குடிமங்கலம், ஆத்துக்கிணத்துப்பட்டி, வரதராஜபுரம், முக்கூடுஜல்லிபட்டி, 20ம் தேதி சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கொண்டம்பட்டி, சி.நாகூர், பண்ணைக் கிணறு கிராமங்களில் நடக்கிறது. சிறு, குறு விவசாயிகள், தங்களது ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -2 கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அடிப்படை புள்ளி விவரங்களை சேகரிக்க வரும் சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, செல்வராஜ் கூறியுள்ளார்.