
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் கோவில்வழியை அடுத்த அமராவதிபாளையத்தில், திங்கள்தோறும் மாட்டுச்சந்தை நடைபெறும். இன்று பொங்கல் பண்டிகை என்பதால், நேற்றே சந்தை நடந்தது.
முன்கூட்டியே தெரிவித்தும், நேற்று விவசாயிகள், வியாபாரிகள் குறைந்தளவே வந்திருந்தனர்.
வழக்கமாக, 600 முதல், 700 மாடுகள் வரும் நிலையில் நேற்று, 500க்கும் குறைவான மாடுகளே வந்தன. மாடுகளை கட்டி வைக்கும் இடங்கள் வெறுமனே மைதானமாக காட்சியளித்தது. தொடர் விடுமுறை என்பதால், கேரளாவில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. 80 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.