/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொள்ளை வழக்கில் 2 பேருக்கு '6 ஆண்டு'
/
கொள்ளை வழக்கில் 2 பேருக்கு '6 ஆண்டு'
ADDED : பிப் 28, 2025 12:22 AM
திருப்பூர்; குன்னத்துார், தொரவலுார் ரோடு கம்மாளக்குட்டையை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 46; ரிக் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். மகன், மகள் உள்ளனர். மகள் சேலத்தில் எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் இவரது மாமனார் இறந்த நிலையில், நம்பியூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார். 12ம் தேதி வீட்டுக்குள் நுழைந்த கும்பல், மகளின் மருத்துவ படிப்புக்கு வைத்திருந்த, 12 லட்சம் ரூபாய், 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். குன்னத்துார் போலீசார் விசாரணை நடத்தினர். கேரளாவை சேர்ந்த சுலைமான், 60, முகமது நிஷார், 30 மற்றும் மேத்யூ, 66 என, மூன்று பேரை கைது செய்தனர்.
ஊத்துக்குளி ஜே.எம்., கோர்ட் மாஜிஸ்திரேட் தரணீதர் வழக்கை விசாரித்து, குற்றவாளி சுலைமான், முகமது நிஷார் ஆகியோருக்கு தலா, ஆறு ஆண்டு சிறை மற்றும் மேத்யூவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

