ADDED : ஆக 23, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தாராபுரம், அங்கித்தொழுவை சேர்ந்தவர் ரவி, 55; டீ மாஸ்டர். பள்ளி செல்லும் மாணவிகள் டீக்கடை அருகே நிற்பது வழக்கம். கடந்த ஆண்டு, 13 வயதுடைய, இரண்டு மாணவியர் கடைக்கு அருகே நின்ற போது, ஆபாசமாக பேசினார்.
தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் ரவியை 'போக்சோ'வில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதர், ரவிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

