/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓராண்டாக திறக்கப்படாத கழிப்பிடம்
/
ஓராண்டாக திறக்கப்படாத கழிப்பிடம்
ADDED : செப் 17, 2024 05:13 AM

திருப்பூர்: திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிட மக்கள், கழிப்பிட வசதியின்றி தவித்தனர். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின், 15வது நிதிக்குழு மானியத்தில், 1.82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிறிய பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது.
கட்டி முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, வடக்கு ஒன்றிய பொதுசெயலாளர் குமார், வார்டு உறுப்பினர்கள் பத்மாவதி, காளிதாசன் ஆகியோர், இதுகுறித்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நேற்று முறையிட்டனர்.
அவர்கள் கூறியதாவது: புதிய கழிப்பிடம் கட்டி பிறகு திறக்கப்படுமென, ஊராட்சி தலைவர் கூறுகிறார். கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.
திருப்பூர் மெயின் ரோட்டில், டிரான்ஸ்பார்மர் அருகே, நெடுஞ்சாலைத்துறை இடத்தில், திடீரென தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர் மிக அருகே, தண்ணீர் தொட்டி கட்டியதால், விபத்து அபாயம் உள்ளது. தன்னிச்சையாக முடிவு செய்து, ஒரு சிலரை பழிவாங்கும் நோக்கில், போக்குவரத்துக்கு இடையூறாக தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

