ADDED : ஆக 18, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், 40வது வார்டு, ஆண்டிபாளையம் - இடுவம்பாளையம் ரோட்டில், முல்லை நகர் மற்றும் தனலட்சுமி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வருவாய் துறைக்குச் சொந்தமான ஏறத்தாழ 50 சென்ட் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் ஆரம்ப சுகாதார மையம் கட்டடம் கட்டுவது குறித்து ஆய்வு நடந்தது. மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர் பத்மநாபன், உதவி கமிஷனர் வினோத், துணை செயற்பொறியாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் இந்த இடத்தை நேற்று சென்று பார்வையிட்டனர்.

