ADDED : பிப் 28, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் யாசர் அராபத், 24. இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த, இரு ஆண்டுக்கு முன், ஆட்டோ தினேஷ் என்ற ரவுடியை ஒரு கும்பல் வெட்டி கொன்றது.
இந்த கொலை வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்ல கூடாது என்று, கொலையில் தொடர்புடைய கண்ணன், 24 யாசர் அராபத்தை மிரட்டினார். தொடர்ந்து, பீர் பாட்டில், கல்லால் தாக்கினார். காயமடைந்த யாசர் அராபத் அளித்த புகாரின் பேரில், நல்லுார் போலீசார் கண்ணனை கைது செய்தனர்.

