ADDED : செப் 25, 2011 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய ரேணுகாதேவி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலராக மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக சென்னையில் கூடுதல் திட்ட இயக்குநராக பணியாற்றிய, சம்பத் பொறுப்பேற்றார்.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராகப் பணியாற்றிய செல்வராஜ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நாகர்கோவிலில் கலால் துறை உதவி கமிஷனராக இருந்த பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.