/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாட்டுச்சந்தையில் ரூ.1 கோடி வர்த்தகம்
/
மாட்டுச்சந்தையில் ரூ.1 கோடி வர்த்தகம்
ADDED : ஜூன் 11, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:வாரந்தோறும் திங்களன்று கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடைபெறும். கடந்த வாரம், 947 மாடுகள் வந்தன. நேற்று வரத்து, 790 ஆக குறைந்தது. கன்று குட்டிகள், 2,500 - 3,500 ரூபாய்; மாடுகள், 29 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்; காளைகள், 27 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. எருது வரத்து குறைவாக இருந்த போதும், 34 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.
சந்தை ஏற்பட்டாளர்கள் கூறுகையில், 'நடப்பு வாரமும் வரத்து குறைந்துள்ளது. வரும் வாரத்திலும் மார்க்கெட் வரத்து உயர வாய்ப்பில்லை. ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது,' என்றனர்.