/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; செய்முறை தேர்வு துவக்கம்
/
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; செய்முறை தேர்வு துவக்கம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; செய்முறை தேர்வு துவக்கம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; செய்முறை தேர்வு துவக்கம்
ADDED : பிப் 25, 2025 06:36 AM
திருப்பூர்; தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு துவங்கி நடந்து வருகிறது.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு, அடுத்த மாதம், 28ம்தேதி துவங்கி, ஏப்., மாதம், 15ம் தேதி வரை நடக்கிறது.
இவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு, கடந்த, 22ம் தேதி துவங்கி, வரும், 28ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி, எவ்வித குளறுபடியுமின்றி குறிப்பிட்ட காலத்துக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடந்தது.