/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம் 1,500 விண்ணப்பங்கள் வந்தன
/
மக்களுடன் முதல்வர் முகாம் 1,500 விண்ணப்பங்கள் வந்தன
மக்களுடன் முதல்வர் முகாம் 1,500 விண்ணப்பங்கள் வந்தன
மக்களுடன் முதல்வர் முகாம் 1,500 விண்ணப்பங்கள் வந்தன
ADDED : ஆக 23, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை ஒன்றியம் எலையமுத்துாரில், கல்லாபுரம், எலையமுத்துார், குருவப்பநாயக்கனுார், தும்பலப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
எலையமுத்துார் ஊராட்சித்தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி முகாமை துவக்கி வைத்தார்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இம்முகாமில், முதியோர் உதவி தொகை, வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த, 1,500க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.