ADDED : ஆக 16, 2024 11:33 PM

அனுப்பர்பாளையம்;திருப்பூர், முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், அரசு மருத்துவமனைக்காக ரத்ததான முகாம் திருப்பூரில் இரண்டு இடத்தில் நடைபெற்றது.
தெற்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்திய முகாமுக்கு, ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம், தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராம்குமார், வரவேற்றார்.
ரோட்டரி முன்னாள் கவர்னர் நாராயணசாமி, முகாமை துவங்கி வைத்தார். மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சாமிநாதன், முயற்சி மக்கள் அமைப்பின் தலைவர் சிதம்பரம் வாழ்த்துரை வழங்கினர். 102 யூனிட் ரத்தம் சேகரித்தனர். ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விபத்து காப்பீடு பாலிசியை, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் வழங்கினர்.
* சென்ட்ரல் லயன்ஸ் கிளப் அறக்கட்டளையுடன் இணைந்து காந்தி நகரில் நடந்த முகாமுக்கு, அதன் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன், அருண்பிரபு முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாசன் வரவேற்றார். முன்னாள் தலைவர் அனந்தநாராயணன் துவக்கி வைத்தார். 89 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ரத்த கொடையாளர்களுக்கு லயன்ஸ் கிளப் டிரஸ்ட் சேர்மன் துரைசாமி, நிர்வாகிகள் சுதாமா கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், முருகசாமி, சுப்பிரமணியம் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.
--
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் நடந்த ரத்த தான முகாமின்போது, ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்பட்டது.

