ADDED : ஏப் 27, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூரில், கத்தியுடன் சுற்றிய, இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தேகப்படும் விதமாக வந்த, இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அப்போது, பாக்கெட்டில், இரண்டு கத்திகள் வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில், திருச்சியை சேர்ந்த டார்வின் ஆண்டோ, 26 மற்றும் ஜோஸ்வா பீட்டர், 24 என்பதும், இருவர் மீது அடிதடி மற்றும் கொலை வழக்கு இருப்பது தெரிந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

