/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு மைதான மேம்பாடு ஸ்டேட் வங்கி ரூ.20 லட்சம்
/
விளையாட்டு மைதான மேம்பாடு ஸ்டேட் வங்கி ரூ.20 லட்சம்
விளையாட்டு மைதான மேம்பாடு ஸ்டேட் வங்கி ரூ.20 லட்சம்
விளையாட்டு மைதான மேம்பாடு ஸ்டேட் வங்கி ரூ.20 லட்சம்
ADDED : ஆக 02, 2024 05:14 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தவும் அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடி மகிழவும், பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கு உதவும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி, சி.எஸ்.ஆர்., நிதியில் பங்களிப்பு வழங்கியுள்ளது. மாநகராட்சியில் உள்ள 10 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்த 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. வங்கி பொது மேலாளர் பிரவாஷ் குமார் சுபுதி, மண்டல மேலாளர் சங்கரா சுப்ரமணியம், முதன்மை மேலாளர் மேகா ஆகியோர் இதற்கான காசோலையை நேற்று வழங்கினர். மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் இதைப் பெற்றுக் கொண்டனர். துணை மேயர் பாலசுப்ரமணியம், உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.