/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் தொகுதிக்கு 2,081 ஓட்டு இயந்திரங்கள்
/
திருப்பூர் தொகுதிக்கு 2,081 ஓட்டு இயந்திரங்கள்
ADDED : ஏப் 05, 2024 11:00 PM
திருப்பூர் : திருப்பூர் லோக்சபா தொகுதியில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பெருந்துறை, அந்தியூர், பவானி, கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மொத்தம், 7 லட்சத்து 91 ஆயிரத்து 19 ஆண்; 8 லட்சத்து 17 ஆயிரத்து 250 பெண்; 252 திருநங்கை என, 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர் உள்ளனர். மொத்தம் 695 ஓட்டுச்சாவடி மையங்களில், 1,745 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.
லோக்சபா தேர்தலுக்காக, திருப்பூர் தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சட்டசபை தொகுதிவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, தேர்தல் பார்வையாளர் ஹிமான்சு குப்தா தலைமையில், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் உள்பட தேர்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 1,745 ஓட்டுச்சாவடிகளுக்கு, மொத்தம் 2,081 பேலட் யூனிட், 2,081 கன்ட்ரோல் யூனிட், 2,255 விவி.பேட் ஆகியன, கம்ப்யூட்டர் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

