/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடை பணியாளர்கள் முன்வைத்த 22 கோரிக்கைகள்
/
ரேஷன் கடை பணியாளர்கள் முன்வைத்த 22 கோரிக்கைகள்
ADDED : ஆக 12, 2024 12:21 AM
திருப்பூர்:கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலர் ராதாகிருஷ்ணனிடம், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:
ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதியம் உடனடியாக அறிவிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பொருள்களுக்கு இருப்பு குறைவுக்கு விதிக்கப்படும் அபராதம் ரத்து செய்ய வேண்டும். அயல் பணி, பணி நிரவல், வெளி மாவட்ட மாறுதல், நிரந்தர மாற்றம் செய்தல் போன்றவற்றை மண்டல இணை பதிவாளர் மேற்கொள்ளும் வகையில் அதிகாரம் வழங்க வேண்டும். பணி வரன்முறைப்படுத்தாத இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும்.
நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்களே ரேஷன் கடைகளுக்கு நகர்வு பணியை மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாடற்ற மளிகை பொருட்களுக்கு ஆன்லைனில் கொள்முதல் செய்ய வேண்டும். வெளிப்படை தன்மையுடன் இவை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு, தரமாகவும் விலை குறைவாகவும் தர வேண்டும்.
உரிய தேதியில் ஊதியம் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி உள்ளதால், அரசே நேரடியாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி ரேஷன் கடைகள், பண்டகசாலை ரேஷன் கடைகள், மார்க்கெட்டிங் சொசைட்டி கடைகள், அர்பன் சொசைட்டி கடைகள் போன்ற அனைத்து ரேஷன் கடைகளையும் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில், 20 சதவீத போனஸ், 10 சதவீதமாக குறைக்கப்பட்டதை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. மொத்தம் 22 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.