/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
22 கடைகளுக்கு ரூ.6.75 லட்சம் அபராதம்; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
/
22 கடைகளுக்கு ரூ.6.75 லட்சம் அபராதம்; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
22 கடைகளுக்கு ரூ.6.75 லட்சம் அபராதம்; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
22 கடைகளுக்கு ரூ.6.75 லட்சம் அபராதம்; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஜூலை 25, 2024 11:07 PM

திருப்பூர் : புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 22 கடைகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வில் சிக்கியுள்ளன. அவிநாசியில், 3வது முறையாக பிடிபட்ட கடைக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், கடந்த 22 முதல் 24ம் தேதி வரை, திருப்பூர், அவிநாசி ஆகிய பகுதிகளிலுள்ள கடைகளில், நடத்திய ஆய்வில், குட்கா, பான் மசாலா, கூல் லிப் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 22 கடைகள் சிக்கின. மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கிறோம். கடந்த மூன்று நாளில் மட்டும், 22 கடைகள் சிக்கியுள்ளன. இவற்றில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து முதல்முறை சிக்கிய 19 கடைகளுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு கடைகளை பூட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி - ஈரோடு ரோட்டில், அடுத்தடுத்து மூன்று கடைகள் சிக்கியுள்ளன. இவற்றில் இரண்டாவது முறையாக பிடிபட்டுள்ள 2 பெட்டிக்கடைகளுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; இந்த கடைகள், 60 நாட்கள் கடைகள் பூட்டப்படுகின்றன.
அவிநாசி - ஈரோடு ரோடு பகுதியில், முத்து பேன்ஸி என்ற கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இந்த கடைக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மீண்டும் மூன்றாவது முறையாக சிக்கியுள்ள அந்த கடைக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும்; 90 நாட்கள் கடை மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தெரிந்தால், 94440 42322 என்கிற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

