ADDED : மே 05, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகரில் ரோந்து மேற்கொண்டனர்.
முருகானந்தபுரத்தில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பலராம், 42 என்பதும், அப்பகுதியில் தங்கி வேலை செய்து வருவது தெரிந்தது. அவரின் பைக்கில் நடத்திய சோதனையில், 2.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த வடக்கு போலீசார், 2.5 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.