/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 282 மனு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 282 மனு
ADDED : ஜூலை 21, 2024 11:11 AM
காங்கேயம்: ஒரே இடத்தில் மக்களுக்கு, அனைத்து சேவைகளுக்கும் வழங்கும் வகையில், அரசு சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்து வருகிறது. இதன்படி காங்கேயம் யூனியனுக்கு உட்பட்ட நத்தக்காடையூர், பழையகோட்டை ஊராட்சிக்கான முகாம், நத்தகாடையூரில் நேற்று நடந்தது.
ஊராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மின் வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை, கூட்டுறவு துறை, காவல் துறை, மாவட்ட தொழில் மையம் காப்பீடு சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் மக்களிடம் இருந்து, 282 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் காங்கேயம் பி.டி.ஓ.,க்கள் அனுராதா, விமலாவதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கருணைபிரகாஷ், கவுன்சிலர்கள் ரவி, செல்வம் ராமசாமி, ஊராட்சி தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.