/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கலை கல்லுாரிகளில் 2ம் கட்ட கவுன்சிலிங் நிறைவு
/
அரசு கலை கல்லுாரிகளில் 2ம் கட்ட கவுன்சிலிங் நிறைவு
அரசு கலை கல்லுாரிகளில் 2ம் கட்ட கவுன்சிலிங் நிறைவு
அரசு கலை கல்லுாரிகளில் 2ம் கட்ட கவுன்சிலிங் நிறைவு
ADDED : ஜூலை 02, 2024 12:07 AM
திருப்பூர்:தமிழகத்திலுள்ள அரசு கலை கல்லுாரிகளில், இரண்டு கட்ட கவுன்சிலிங் வாயிலாக, 70 சதவீதத்துக்கு அதிகமான இடங்கள் நிரம்பிய நிலையில், ஜூலை முதல் வாரத்தில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்க உள்ளது.
திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மொத்தமுள்ள, 1,066 இடங்களில், 950 இடங்கள் பூர்த்தியாகி விட்டது. இன்னமும் கலைப்பிரிவில், 17, அறிவியலில், 77, மொழித்தாளில் மூன்று, வணிகவியலில், எட்டு என, 105 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.
சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் மொத்தமுள்ள, 808 இடங்களில், 748 இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. மீதம், 69 இடங்கள் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் மட்டுமே உள்ளது. அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில் மொத்தமுள்ள, 364 இடங்களில், 91 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது; 273 இடங்கள் நிரம்பி விட்டது.
தாராபும் அரசு கல்லுாரியில், 86 இடங்கள் காலியாக உள்ளது; இக்கல்லுாரியில் உள்ள, 230 இடங்களில், 144 இடங்கள் இரண்டு கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பி விட்டது. காங்கயம் அரசு கல்லுாரியில், மொத்தமுள்ள, 340 இடங்களில், 180 இடங்கள் பூர்த்தியாகி விட்டது. மீதம், 160 இடங்கள் இன்னமும் காலியாக உள்ளது.
அரசு கலைக் கல்லுாரி முதல்வர்கள் கூறியதாவது:
இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், 60 முதல், 85 சதவீத இடங்கள் பூர்த்தியாகி விட்டது. மீதமுள்ள இடங்களுக்கு அடுத்த கட்ட கவுன்சிலிங் வைப்பதா அல்லது தற்போதைய நிலையில், கூடுதல் ஒதுக்கீடு குறித்து அறிவிப்பதா என்பதை உயர்கல்வித்துறை இயக்குனரகம் முடிவு செய்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.