/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகை வியாபாரியிடம் மோசடி; மேலும் 3 பேர் சிக்கினர்
/
நகை வியாபாரியிடம் மோசடி; மேலும் 3 பேர் சிக்கினர்
ADDED : மார் 07, 2025 11:14 PM
பொங்கலுார்; நகை வியாபாரியிடம், 1.10 கோடி பறித்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைதான நிலையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர், கீழநஞ்சையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 60. நகை வியாபாரி. கடந்த, 4ம் தேதி மாலை நகை வாங்குவதற்காக கரூரிலிருந்து, காரில் கோவை சென்ற போது, காங்கயம் - சம்பந்தம்பாளையம் அருகே வழிமறித்த ஒரு கும்பல், தங்களை போலீஸ் எனக்கூறி, 1.10 கோடி ரூபாய், மூன்று மொபைல் போன்களை பறித்துச் சென்றனர்.
அவிநாசி பாளையம் போலீசார் விசாரித்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரித்ததில், நேற்று முன்தினம் கார் டிரைவர் ஜோதிவேல், அவரது நண்பர் தியாகராஜன், 41 ஆகியோர் கைது செய்யப்பட்டு, 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று திருச்சியை சேர்ந்த ராஜு மகன் ஸ்ரீகாந்த், 22, நாகையை சேர்ந்த ஹரிதாஸ் மகன் விக்னேஷ், 28, கரூரை சேர்ந்த பாக்யராஜ் மகன் யோகேஷ், 19 ஆகியோரை கைது செய்தனர். மூன்று பேரிடம் இருந்து, 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.