/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் ரூ.3.33 லட்சம் பறிமுதல்
/
இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் ரூ.3.33 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 21, 2024 11:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3.33 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் -- பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் அருகில் கூடுதல் பறக்கும் படை செல்வசங்கர் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, காரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அம்மாபாளையத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஈஸ்வரமூர்த்தி என்பவர், உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 லட்சத்து, 33 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

