/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகாரிகள் "ரெய்டு'; மாத்திரை பறிமுதல்
/
அதிகாரிகள் "ரெய்டு'; மாத்திரை பறிமுதல்
ADDED : ஜூலை 11, 2011 09:36 PM
திருப்பூர் : பிளாஸ்டிக் பொருட்கள் சோதனைக்குச் சென்ற அதிகாரிகள்,
காலாவதியான மாத்திரைகளை கைப்பற்றினர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள
கடைகளில், தடை செய்யப்பட்ட 'ஒன் யூஸ்' பிளாஸ்டிக் கவர், டம்ளர் போன்ற
பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனையிட, மாநகராட்சி சுகாதார
பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பகுதி வாரியாக இக்குழுவினர் பல
பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்
முரளிகிருஷ்ணன், உதவியாளர் சேகர் ஆகியோர் நேற்று அதிகாலை முதல் பல்வேறு
பகுதிகளில் இச்சோதனையை நடத்தினர். தாராபுரம் ரோடு, அரிசி கடை வீதி,
காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு பகுதிகளில் நான்கு கடைகளில், விற்பனைக்கு
வைத்திருந்த பிளாஸ்டிக் கவர் மற்றும் டம்ளர் பறிமுதல் செய்யப்பட்டு,
கடைக்காரர்களுக்கு தலா 750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அரிசி கடை
வீதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பல்வேறு மாத்திரைகள்
பறிமுதல் செய்யப் பட்டன. தலைவலி, உடல் வலி போன்றவற்றுக்கு
பயன்படுத்தப்படும் மாத்திரைகள் இருந்தன. சில மாத்திரைகள் காலாவதியானவையாக
இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், 'மாநகராட்சி சுகாதார
அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.