/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
/
அமராவதி அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அமராவதி அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அமராவதி அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
ADDED : ஜூலை 24, 2024 08:12 PM
உடுமலை:உடுமலை அமராவதி அணையிலிருந்து, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த ஜூன், 24 முதல், பழைய ஆயக்கட்டு, எட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, கடந்த, 18ம் தேதி அணை நிரம்பியது; கடந்த ஒரு வாரமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இச்சூழலில் அமராவதி பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 வலது கரை கால்வாய்கள் வழியாக பாசன வசதி பெற்று வரும், 21,867 ஏக்கர் நிலங்களுக்கு,
இன்று முதல், வரும், ஆக., 8 வரை, 15 நாட்களுக்கு, ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, ஆயிரம் கனஅடி நீர் வீதம், மொத்தம், 1,296 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, இன்று முதல், ஆக., 8 வரை, 15 நாட்களுக்கு, பிரதான கால்வாயில், வினாடிக்கு, 440 கன அடி வீதம், 570.24 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இப்பாசன பகுதிகளில், நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும், சிறப்பு நனைப்பு மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் திறக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அணை நீர் மட்டம்
நேற்று காலை நிலவரப்படி, அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 89.92 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,949.08 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.
அணையிலிருந்து ஆற்றில், 1,025 கனஅடி நீரும், பிரதான கால்வாயில், 379 கன அடி நீரும், நீர்இழப்பு, 20 கனஅடி என, 1,404 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

