ADDED : மே 03, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூரில், விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கிய, மூன்று பேரை கைது செய்து, ஆறு கிலோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, வீரபாண்டி அருகே பலவஞ்சிபாளையத்தில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அதில், சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த, மூன்று பேரிடம் விசாரித்தனர். உ.பி., மாநிலத்தை சேர்ந்த குரு புருஷோத்தன் சாகர், 34, பீகாரை சேர்ந்த டேவனண்டோ மகாட்டோ, 32 மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார், 23 என்பது தெரிந்தது.
மூன்று பேரும் திருப்பூர் அய்யம்பாளையத்தில் தங்கி வேலை செய்து கொண்டே, ஒடிசா உள்ளிட் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா பொட்டலங்களை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்து, ஆறு கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.