/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியில் மாதம் 60 டன் பிளாஸ்டிக் கழிவு; சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு
/
நகராட்சியில் மாதம் 60 டன் பிளாஸ்டிக் கழிவு; சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு
நகராட்சியில் மாதம் 60 டன் பிளாஸ்டிக் கழிவு; சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு
நகராட்சியில் மாதம் 60 டன் பிளாஸ்டிக் கழிவு; சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு
ADDED : பிப் 27, 2025 11:09 PM

உடுமலை; உடுமலை நகராட்சியில், மாதம் தோறும், 60 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 74 ஆயிரத்து, 568 பேர் வசித்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்கள் வாயிலாக, 18 ஆயிரத்து, 630 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக பிரித்து பெறப்படுகிறது.
தினமும், 12 டன் மக்கும் குப்பையும், 7 டன் பிளாஸ்டிக் கழிவுகள், 2 டன் மின்ணணு உள்ளிட்ட பிற கழிவுகளும் சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை, நகராட்சி நுண் உரக்குடில் வாயிலாக, உரமாக மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மக்காத பிளாஸ்டிக் கழிவுகள், வள மீட்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, தினமும் பேல்களாக மாற்றப்படுகிறது. இதனை, திருச்சி அரியலுாரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு, எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று, 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள், லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், வீடுகள் தோறும் வந்து, குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களிடம், மக்கும், மக்காத குப்பையை பிரித்து வழங்கினால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியும்.
தற்போது ஒரு சில வீடுகளில், அனைத்து கழிவுகளையும் கலந்து வழங்குவதால், அதனை கொண்டு வந்து, மீண்டும் துாய்மைப்பணியாளர்கள் பிரித்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து வைத்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.