/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
36 கடைகளுக்கு ரூ.9.50 லட்சம் 'பைன்'
/
36 கடைகளுக்கு ரூ.9.50 லட்சம் 'பைன்'
ADDED : ஆக 13, 2024 11:30 PM

திருப்பூர்;உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடந்த ஒரு வாரத்தில் நடத்திய ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்த, 36 கடைகள் பூட்டப்பட்டு, ரூ.9.50 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள், கடந்த ஒரு வாரத்தில் நடத்திய ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா, குட்கா விற்பனை செய்த 32 கடைகள் பூட்டப்பட்டு, மொத்தம் 9.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்து முதல்முறை பிடிபட்ட 28 கடைகளுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 7 லட்சம் ரூபாய்; இரண்டாவது முறை பிடிபட்ட 3 கடைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருமுருகன்பூண்டியில் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள பெட்டிக்கடைக்கு ஏற்கனவே இரண்டு முறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
பெட்டிக்கடை பூட்டப்பட்ட நிலையில், மதுக்கடை அருகே உள்ள அறையில் வைத்து, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்துள்ளனர். மூன்றாவது முறையாக பிடிபட்டதால், புகையிலை விற்பனை செய்த அறையை பூட்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.